Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டி தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் கோயில்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் தூத்துக்குடி நகரில் உள்ள விநாயகர் கோயில்களில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி நிர்வாகிகள் ராகவேந்திரா, சரவணகுமார், இசக்கி முத்துக்குமார், மாதவன், ஆறுமுகம், நாராயணராஜ், பலவேசம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விநாயகர் சிலைகள் முன்பு மனுக்களை வைத்து வழிபட்ட பிறகு அவற்றை கோயில் பூசாரிகளிடம் வழங்கினர்.
கோவில்பட்டி
இதுபோல் இந்து முன்னணி நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில், அதன் நிர்வாகிகள் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், நகர பொதுச்செயலாளர் சுதாகரன், ஒன்றியத் தலைவர்முத்துராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் வடிவேல் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க., இந்து ஆலய பாதுகாப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT