Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கேரள அரசு, காவிரி ஆணையக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழக விவவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
காவிரியின் குறுக்கே மேகேதாட் டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த, தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆதரவளிக்க வேண்டும். கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க உதவ வேண்டும் என வலியுறுத்தி, ஆக.30-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்து, வேண்டுகோள் விடுக் கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர், உயர் அதிகாரி களுடன் கலந்துபேசி, காவிரி ஆணையக் கூட்டத்தில் கேரள அரசு சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என உறுதியளித்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு எதிராக சட்ட விரோதமாக மேகே தாட்டுவில் அணை கட்டுவதை கேரளா அரசு அனுமதிக்காது என்று அம்மாநில அதிகாரிகள் உறுதியோடு தெரிவித்துள்ளனர். இதனால், மேகே தாட்டு பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தமிழகம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
எங்கள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுத்த கேரள முதல்வர் பினராயி விஜய னுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து, தமிழக-கேரள நல்லுறவை வலுபடுத்தும் வகையில் தமிழக அரசு சார்பிலும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT