Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

கோட்டூரில் - அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல் :

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் சென்னையில் நேற்று முன்தினம் மனு அளித்தார்.

மனுவில் தெரிவித்துள்ளது: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு நிகராக, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கோட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x