Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்எல்ஏ மா.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 186 பயனாளிகளுக்கு ரூ.6,02,680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் வழங்கினர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கன்னி, தொழிலாளர் உதவி ஆணையர்கள் ஜெ.எ.முஹம்மதுயூசுப் (சமூக பாதுகாப்பு திட்டம்), மு.பாஸ்கரன்(அமலாக்கம்), மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலர் சி.கிறிஸ்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் ஆர்.ரமணகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT