Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

விசாரணை கைதி தப்பியோட்டம் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய பகுதியில் நடைபெற்றபல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்பாக தென்காசி மாவட்டம் கடையம்கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (37) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். கடந்த 16-ம் தேதி அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். கடந்த 23-ம் தேதி சிறையில் பாலமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள ஆண்கள் பொது வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. அவரது பாதுகாப்பு பணியில் ஆயுதப்படையைச் சேர்ந்த 4 போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பாலமுருகன் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆயுதப்படை போலீஸார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் தனிப்படை அமைத்து பாலமுருகனை தேடிவருகின்றனர்.

பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக ஆயுதப்படை காவலர்கள் உதயக்குமார், பகவதி தெய்வம், மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்து, எஸ்பி உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x