Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

தனியார் நிறுவனங்கள் முன்வராதபட்சத்தில் - பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும் : திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர்

பயிர்க் காப்பீட்டை ஏற்று நடத்த தனியார் நிறுவனங்கள் முன்வராத பட்சத்தில், பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன், நெல் லுக்கு பயிர்க் காப்பீடு இல்லை. பாதிப்பு ஏற்படும்போது பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உரிய தொகை வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது திருப்தி அளிக்கவில்லை என்றுகூறி தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

குடவாசல் சேதுராமன்: எவ்வித உத்தரவாதமும் இன்றி நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிக ளுக்கு இயற்கை சீற்றங்களின் போது பயிர்க் காப்பீடு திட்டமும், அரசு தருகின்ற நிவாரணமும் மட்டுமே நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வேளாண் துறை அமைச்சரின் குழப்பமான அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

பயிர்க் காப்பீட்டை ஏற்று நடத்த தனியார் நிறுவனங்கள் முன் வராதபட்சத்தில், பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் காப்பீட்டுக் கொள்கையில் எவ்வித மாற்றத்தை யும் கொண்டுவரக் கூடாது.

பஞ்சநாதன்: குறுவை நெல் லுக்கு காப்பீடு இல்லை எனும் போது, எதை சாகுபடி செய்வது என அரசு வழிகாட்ட வேண்டும்.

முகேஷ்: தற்போது குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், 100 நாள் வேலை திட்டப் பணிகளும் நடைபெறுகின்றன. இதனால் வேலையாட்கள் தட்டுப் பாடு ஏற்படுகிறது. எனவே, குறுவை சாகுபடி நடைபெறும் வேளையில், 100 நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

ராஜேந்திரன்: பல இடங் களில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய விளைநிலங் களுக்கு சென்றுவர பாதையின்றி விவசாயிகள் சிரமப்படுகிறோம். எனவே, விளைநிலங்களுக்கு வருவாய்த் துறையினர் பாதை அமைத்துத் தர வேண்டும்.

வைத்தியலிங்கம்: குறுவை தொகுப்புத் திட்டம் அறிவித்ததைப் போல, சம்பா தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கை களை கேட்டறிந்த ஆட்சியர், அவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x