Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கன்னியா குமரியிலிருந்து டெல்லிக்கு சைக்கிள் பேரணி செல்லும் தென்மண்டல சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று காலை விருதுநகர் வந்தனர்.
கன்னியாகுமரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணியை, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
"ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ் "என்ற தலைப்பில் 20 வீரர்கள் சிஆர்பிஎப் உதவி கமாண்டண்ட் பிரதீப் தலைமையில் டெல்லி ராஜ்பவன் வரை சுமார் 2,850 கி.மீ. தூரம் சைக்கிள் பேரணி மேற்கொள்கின்றனர்.
சகோதரத்துவம், சமூக நீதி, மதசார்பின்மை போன்ற கோட்பாடு களை பேணிக்காக்கும் வகையில் இப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இப்பேரணி கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் தொடங்கி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா சென்று, தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாக அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்திக்கு முன்னதாக டெல்லி ராஜ்பவனை அடைய உள்ளது.
விருதுநகர் வந்தனர்
நேற்று காலை சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணி விருதுநகர் வந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி மனோகர் சிஆர்பிஎப் வீரர்களை வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து மதுரை நோக்கி வீரர்கள் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT