Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM
6 ஆண்டுகளாகப் போராடிய திருப்பத்தூர் பெண்ணுக்கு உங் கள் தொகுதியில் முதல்வர் திட் டத்தில் 16 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் சீதளி கீழ் கரையைச் சேர்ந்தவர் சகுபர் நிஷா. இவர் ரேஷன்கார்டு கேட்டு 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து மனு கொடுத்து வந்தார். ஆனால் பல்வேறு காரணங்க ளால் அவருக்கு ரேஷன்கார்டு கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அனுப்பினார். இதையடுத்து 16 நாட்களில் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
இதேபோல் சிவகங்கை மாவட் டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 6,198 மனுக்கள் பெறப்பட்டு 3,414 மனுக்கள் தீர்க்கப்பட்டன. இதில் வருவாய்த்துறை மூலம் 222 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 337 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 26 பேருக்கு இதர நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.
அதேபோல் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 390 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை மூலம் 317 கி.மீ.க்கு 215 புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இதுகுறித்து ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி கூறியதாவது: 3,414 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத 740 மனுக்கள் மீது அதிகாரிகள் கள ஆய்வு செய்து, மனுதாரர்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT