Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
பனைமரம் வெட்ட தடை விதிப்பு மற்றும் 1 லட்சம் பனை கன்றுகளை நட்டு வளர்க்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்று உழவர் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாறு அடுத்த பாராசூர் கிராமத்தில் நடைபெற்ற பனைமரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர், கடந்த 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடவு செய்யப்பட்ட பனை கன்றுகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த பணியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி, நடவு செய்யப்பட்ட பனை கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும், வேலிகளை அமைக்க வேண்டும்.
பனை வெல்லம், பனங்கற் கண்டு, பதநீர் இறக்குதல், பனை விசிறி, பனை தொன்னை மற்றும் பனை தோரணம் தயாரிப்பை ஊக்குவித்து விவசாயிகளுக்கு லாபம் தரும் தொழிலாக பனை தொழிலை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைமரம் வெட்ட தடை, பனை கன்றுகள் நட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
பனைத் தொழிலை ஊக்கப்படும் வகையில் பனை தொன்னை, பனை விசிறி, பனை வெல்லம், பனங்கற்கண்டு மற்றும் பனை தோரணம் ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று பனை மரத்தடியில்பனை படையலிட்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர், தொன்னையில் பதநீர் ஊற்றி பருகப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொன்னமங் கலம் சிவராமன், மோட்டூர் மண்ணு, அனப்பத்தூர் பழனி, தொகுப்பேடு செந்தில், கீழ்மட்டை தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT