Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM
பெட்ரோலுக்கான வரியை ரூ.32-ல் இருந்து ரூ.9 ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
இதுகுறித்து விருதுநகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொள்வதாக கூறுகிறார். பாஜகவை பொருத்தவரை தமிழ் மண்ணின் கலாசாரத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து இருக்கிறார்கள்.
கரோனா 3-ம் அலை வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் இருக்க பாஜக மக்கள் ஆசி யாத்திரையை நிறைவேற்றுகிறது. யாத்திரை கலாச்சாரம் தமிழ் நாட்டில் எடுபடாது. பட்டியலின மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்காமல், அந்த இனத்தைச் சேர்ந்த யாரோ 4 பேரை அமைச்சராக்கி, அவர்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதுபோல பாஜக நாடகமாடுகிறது. பெட்ரோல், டீசல் வரியை பழையபடி ரூ. 9 ஆக குறைக்கவேண்டும். தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் முற்போக்கு சிந்தனையான பட்ஜெட். எந்த மாநில அரசும் செய்யாத பெட்ரோல், டீசல் விலை குறைப்பை தமிழக அரசு செய்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT