Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் விரைவில் நியமனம் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித்ததாக எம்.பி தகவல்

திருவாரூர்

திருவாரூர்- காரைக்குடி ரயில் வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் விரைவில் நியமனம் செய்யப்ப டுவார்கள் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித் துள்ளார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினருமான எம்.பி எம்.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவுமான க.மாரிமுத்து ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸை சென்னையில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

இதுதொடர்பாக எம்.பி எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளது:

திருவாரூர்-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் முழு ரயில் சேவை யைத் தொடங்குவதற்கு ஏதுவாக, 72 இடங்களில் ரயில்வே கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும்.

இந்த வழித்தடத்தில் ஏற்கெ னவே இயக்கப்பட்ட போட் மெயில் எனப்படும் சென்னை-ராமேசுவரம் கம்பன் எக்ஸ்பிரஸ் எனப்படும் சென்னை - காரைக்குடி ரயில் உட்பட அனைத்து எக்ஸ் பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் களை மீண்டும் இயக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தி யம் பள்ளி அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் 2021-க்குள் நிறைவடையும் என்று திட்டமிடப் பட்டுள்ளதால், சுரங்கப்பாதை அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது, நான்கு இடங்களில் கேட் கீப்பருடன் ரயில்வே கேட், நடைபாதை அமைப்பது போன்ற வற்றை விரைவில் முடிக்க வேண்டும்.

அதிகமான வருமானம் வரக் கூடிய முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, மேம் படுத்த வேண்டும். கீழ்வேளூர், கொரடாச்சேரி, நன்னிலம், பேரளம் ஆகிய ரயில் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.

கரோனா தொற்று பரவலால் நிறுத்தப்பட்ட காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத் தினோம்.

அப்போது, கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், திருவாரூர்- காரைக்குடி ரயில் வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் நியமனம் கூடிய விரைவில் நடைபெறும் என உறுதி யளித்ததாக எம்.பி எம்.செல்வராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x