Published : 18 Aug 2021 03:15 AM
Last Updated : 18 Aug 2021 03:15 AM
எம்பவர் இந்தியா நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி,ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழகத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்ரூ.20-க்கு தனியார் நிறுவனங்களால் விற்கப்படுகிறது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.13-க்கு மட்டுமே விற்க வேண்டும் என, அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்திலும் குடிநீர் பாட்டிலை ஒரு லிட்டர் ரூ.13-க்கு மட்டுமே விற்க அரசாணை வெளியிட வேண்டும். இதனால் நுகர்வோரும், பொதுமக்களும் பயனடைவார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT