Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM
சுதந்திர தினவிழாவையொட்டி மக்கள் வாசிப்பு இயக்கம், மிர்த்திகா பதிப்பகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ஏ.பி.ஆர். மகாலில் புத்தகக் காட்சியை நடத்துகின்றன.
தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜன், ராஜகோபால், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் சந்திரகுரு புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் வரவேற்றார்.
தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக்குழு நிர் வாகி முகமது எகியா, தமுஎகச கிளைத் தலைவர் மாரிமுத்து, சிறுபான்மை நலக்குழு நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விருதுநகர் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் ரத்தினக்குமார், தமுஎகச மாநில துணைப் பொதுச் செய லாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
செப்.12-ம் தேதி வரை இப்புத்தகக் காட்சி நடைபெறும். 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.விருதுநகரில் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்துப் பார்வையிட்ட பேராசிரியர் சந்திரகுரு, தமுஎகச மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் உள்ளிட்டோர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT