Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், நன்னிலத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ராம குணசேகரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சம்பத், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுவாதி கோபால், நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எம்எல்ஏ ஆர்.காமராஜ் பேசியது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நன்னிலம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், சாலைகள், இணைப்புப் பாலங்கள், அரசினர் கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.3 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதுபோன்ற பணிகளுக்காக, நடைபெறவுள்ள நன்னிலம் பேரூராட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் 100 சதவீத வெற்றியைத் தருவார்கள். இந்த வெற்றியை ஒருங்கிணைக்கும் பணியில் நிர்வாகிகள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT