Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகபொறுப்பாளரும், சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த திமுக தலைவர்கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு தினம் நாளை (ஆக.7) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய பகுதிகள் மற்றும் வார்டுகள் தோறும் அவரது திருவுருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்த வேண்டும். ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கிட வேண்டும். கரோனா விதிமுறைகள், சமூக இடைவெளியை பின்பற்றி இதில் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகபொறுப்பாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை காலை 7.30 மணிக்குதூத்துக்குடி எட்டயபுரம் சாலை கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் வழங்கும்திட்டம் காலை 9.30 மணிக்கு திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மணப்பாட்டில் மீனவ மக்கள் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்லும் பகுதியில் உள்ள மணல் திட்டை அப்புறப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்படும்.
மீனவர் கூட்டுறவுசங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்ப்பு தொடங்கி வைக்கப்படுவதோடு, 5 படகுகளுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கப்படும். பின்னர் உடன்குடி, தண்டுபத்தில் உள்ளதொகுதி அலுவலகத்தில் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT