Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM

மீன்வளர்ப்புக் குளங்கள் அமைப்பவர்களுக்கு மீன் குஞ்சுகள், தீவனங்கள் வாங்க மானியம் :

ஈரோடு

மீன்வளர்ப்புக் குளங்கள் அமைப்பவர்களுக்கு, மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேரில் ரூ.7 லட்சம் செலவில் மீன்வளர்ப்புக் குளங்கள் அமைப்பவர்களுக்கு, அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ. 3.50 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் செலவில் மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனங்கள் வாங்குவதற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கென மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது 5 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, ஈரோடு பெருந்துறை சாலை சுப்புராம் காம்பிளக்ஸில் அமைந்துள்ள, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424 - 2221912 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x