Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிட்-19 கடலூர் மாவட்ட மக்கள் உதவி மையத்தின் சார் பாக கரோனா தடுப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மாணவர் சங்க,வாலிபர் சங்க, ஆட்டோ சங்கத் தைச் சேர்ந்தவர்களுக்கு கடலூரில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப் பினர் மூசா முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன் வரவேற்று பேசினார். இதில் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஊரடங்கு காலத்தில் கரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்று இலவச ஆட்டோ சேவை செய்தகடலூர், சிதம்பரம் ஆட்டோ ஓட்டு நர்கள், பண்ருட்டி விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து, காய்ச்சல் பரிசோதனை செய்த வாலிபர் சங்கம், மாணவர் சங்கத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி நினைவு பரிசு அளித்து பாராட்டிப் பேசினார்.
நிவாரணப் பணிகளை தொகுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன் உதயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் நகர செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT