Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் 216-வது நினைவு நாளையொட்டி, கரூரில் அவரது உருவப்படம் மற்றும் சிலைக்கு திமுக, அதிமுக, கொமதேக, கொங்கு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கலைஞர் அறிவாலயம் முன் தீரன் சின்னமலை உருவப்படம் மற்றும் வல்வில் ஓரி படத்துக்கு திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், நகரப் பொறுப்பாளர்கள் எஸ்.பி.கனகராஜ், ராஜா, (வடக்கு) கணேசன், (தெற்கு) வழக்கறிஞர் சுப்பிரமணியன், (மேற்கு)பி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகரச் செயலாளர்கள் (மத்தி) வை.நெடுஞ்செழியன், (தெற்கு) விசிகே ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட தீரன் சின்னமலை சிலைக்கு அக்கட்சியின் மாநில நிர்வாகி சண்முகம், மேற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, கொங்கு இளைஞர் அணி ஆகியவற்றின் சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் ஈச்சம்பட்டி, ரெட்டைமலை சந்து பகுதியில் கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் தீரன் சின்னமலை படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல மங்கூன், ஈச்சங்காடு, பூலாம்பாடி, மலையாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு அக்கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். `
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT