Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

மதுரை, தேனி பிஆர்ஓ-க்கள் பொறுப்பேற்பு :

மதுரை/தேனி: மதுரை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நவீன் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியிடத்துக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த சாலி தளபதி நியமிக்கப்பட்டார். நேற்று மதுரை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக சாலி தளபதி பொறுப்பேற்றார்.

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய செந்தில் அண்ணா கோவைக்கும், கோவை போக்குவரத்துத் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய ரா.சண்முகசுந்தரம் தேனிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரா.சண்முகசுந்தரம் நேற்று பொறுப்பேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x