Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, இன்று (ஆக.2) ஆடிக்கிருத்திகை, நாளை (ஆக.3) ஆடிப்பெருக்கு பண்டிகை மற்றும் வரும் 8-ம் தேதி ஆடி அமாவாசை ஆகிய 3 நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு, கோயில்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். கரோனா பரவலை தடுக்கும் நோக்கில், மேற்கண்ட 3 நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோயில், ஊத்துக்குளி சர்க்கார்பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில், காங்கயம் வட்டம் முத்தூர் செல்வகுமாரசுவாமி கோயில், முத்தூர் அத்தனூரம்மன் மற்றும் குப்பியண்ண சுவாமி கோயில், மூலனூர் வஞ்சியம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மேலும் காங்கயம் மேட்டுப்பாளையம் நாட்ராய சுவாமி கோயில், வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோயில், தாராபுரம் மணலூர் செல்லாண்டியம்மன் கோயில், காங்கயம் வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோயில், அவிநாசி கருவலூர் மாரியம்மன் கோயில், ஊத்துக்குளி வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோயில், தாராபுரம் காடு அனுமந்தராயசுவாமி கோயில், பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோயில், தம்மரெட்டிபாளையம் கொடுமணல் தங்கம்மன் கோயில், ஊத்துக்குளி வெற்றிவேலாயுதசுவாமி கோயில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி வீரராகவப்பெருமாள் கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயில் என 22 கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT