Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

செங்கை காவல் மாவட்டத்தில் - மூத்த குடிமக்கள் பாதுகாப்பு குழு :

மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக புதிய செல்போன் எண்ணை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிமுகம் செய்துவைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த சாம்சன் தினகரன் (65), இவரது மனைவி ஜெனட் (52) ஆகியோரை கடந்தஜூலை 16-ம் தேதி மர்ம நபர்கள்கொலை செய்துவிட்டு, வீட்டில்இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து ஒட்டேரி போலீஸார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் சுந்தர் (32) ஆகியோரை கைது செய்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

தனிமையில் இருக்கும் முதியோர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில்மூத்த குடிமக்கள் பாதுகாப்புக் குழு தொடங்கப்பட்டு 7200102104 செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார் கூறியதாவது: செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களை பாதுகாக்கதனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் மூத்த குடிமக்களுக்கு என தனியாக ஒரு பதிவேடு பராமரிக்கப்படும். மூத்த குடிமக்கள் 7200102104 இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x