Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின், அலுவலக ரீதியாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் 4-வது வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்துக்கான கூட்டம் வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம். மேலும் அரசுஊழியர்களின் குறைதீா் கூட்டத்தில் அனைத்து துறை 2-ம் நிலைஅலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அலுவலர்களின் கோரிக்கைகளை 14 நாள்களுக்குள் நிவர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக மாதந்தோறும் 4-வது வெள்ளிக்கிழமை ஆட்சியரால் ஆய்வு செய்யப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT