Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையில் முதல்வரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை ரசீது பெற்று,18 வயது நிறைவடைந்த பயனாளிகளிடம் இருந்து முதிர்வுத் தொகைவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதிர்வுத் தொகைபெற விரும்புவோர் வைப்புத் தொகை ரசீது, பயனாளியின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், வங்கிக் கணக்கு நகல், புகைப்படம் (பயனாளி மற்றும் தாய்), ஒரு ரூபாய்அஞ்சல் வில்லை ஆகிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார அலுவலகங்களின் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது ஊர்நல மகளிர் அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்டசமூகநல அலுவலகம், மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம்,கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரிலும்,0461 2325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT