Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
தூய்மை பணியாளர்களுக்கு மாதம் தோறும் உடல் நலப்பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை குப்பைக்கழிவு இல்லாத சுத்தமான மாவட்டமாக மாற்றும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தினார்.
இதுதவிர,திருப்பத்தூர் நகரை சுத்தப்படுத்தும் பணிகளில் தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணைந்து பணி யாற்ற வருமாறு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மைப் பணிகள் நேற்று தொடங்கின. திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை பாச்சல் ஊராட்சி மற்றும் திருப்பத்தூர் பெரிய ஏரி நீர் நிலைகளில் கொட்டப் பட்டிருந்த கழிவுகளை அகற்றும் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் தூய்மைப்பணியில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ப.உ.ச.நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைக்கழிவு தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் ஆட்சியர் கூறும்போது, “குப்பையை பொது இடங்களில் கொட்டாமல், அவற்றை சேகரித்து தரம் பிரித்து உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 8.56 ஏக்கர் பரப்பளவில் தரம் பிரிப்பு பணிகள் நடக்கின்றன.
இது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு தரம் பிரிப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக குழுவினர் இதை கண்காணித்து வருகின்றனர். இப்பணிகளில் 30 பேர் ஈடுபட்டுள்ள னர். இங்கு, பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள குப்பைக்கழிவு கள் தரம் பிரித்து அப்புறப்படுத்தம் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடியும் என அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உடல் நல பரிசோதனை, நோய் தடுப்பு விதிகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உடல்நல பரிசோதனை மேற்கொள்ளவும், குப்பையை தரம்பிரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை குப்பைக்கழிவு இல்லாத சுத்தமான, சுகாதாரமான இடமாக மாற்ற மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 100 ஊராட்சிகளில் தூய்மைப்பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. மீதமுள்ள 108 ஊராட்சிகளிலும் விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சிபொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT