Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM
சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்காக, பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் இன்று (23-ம் தேதி) நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (23-ம் தேதி) மாமாங்கம், வன்னியர் நகர், குடுமியான் தெரு, சையத் அலி தெரு, காட்டூர், ஆத்துக்காடு, நேதாஜி நகர், மேட்டுக் கண்ணன் தெரு, அல்லிக்குட்டை, கணக்கர் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அம்மாப்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி, குகை மாரியம்மன் கோயில் மெயின்ரோடு, காளியம்மன் கோயில் தெரு, தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முகாம் நடக்கிறது.
ரெட்டியூர் அண்ணா நகர், மாரியம்மன் கோயில் தர்ம நகர், செட்டியார் காலனி, நடுத்தெரு, சக்தி நகர், குயின் சர்க்கிள், காமராஜ் காலனி, மாணிக்கம் தெரு, தேசிய புனரமைப்பு காலனி, காந்தி மகான் தெரு, பட்டநாயக்கர் காடு, சோழன் தெரு, ராமலிங்கசாமி தெரு, முனியப்பன் கோயில் தெரு, செங்கல்பட்டி, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், ஜாகீர் அம்மாப்பாளையம் காளியம்மன் கோயில் தெரு, ரயில் நகர், ஆண்டிப்பட்டி, வெள்ளைசாமி தெரு, பேர்லேண்ட்ஸ், கே.ஏ.எஸ்.நகர், காளியப்ப செட்டியார் காலனி, சையது காசீம் தெரு, முராரி வரதய்யர் தெரு, சுந்தரர் தெரு, இளந்தோப்பு, அம்மாப்பேட்டை அண்ணா தெரு, லைன் ரோடு, ரங்கதாஸ் தெரு, பாண்டுரங்கன் விட்டல் தெரு, பராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும். காய்ச்சல் கண்டறிய நடத்தப்படும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT