Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

கருணைக் கொலை செய்யக் கோரி : ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவன் மனு :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கண்ணமனூரை சேர்ந்த சிறுவன் மனோஜ் (12). இவர் ஆவிலிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். திண்டுக்கல் ஆட்சியரிடம் சிறுவன் மனோஜ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நான்காம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையிலேயே வலிப்பு நோய் வந்தது. இதையடுத்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. எனது பெற்றோர் தினக்கூலிக்கு சென்று வருவாய் ஈட்டுவதால் மருத்துவ சிகிச்சைக்கு போதிய செலவு செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

என்னால் எனது குடும்பத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்குள்ள வலிப்பு நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவனுடன் அவரது பெற்றோர் செல்வம், கவிதா ஆகியோரும் வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x