Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

தேனி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை தடுக்க குடியிருப்புகளில் ஆய்வு :

ஆண்டிபட்டி: கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அருகில் உள்ள தேனி மாவட்டத்தில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, ஆண்டிபட்டியில் ஏடீஸ் கொசுக்களை கட்டுப்படுத்த 30 தற்காலிக பணியாளர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு குடியிருப்புகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறதா மற்றும் நீரில் புழுக்களின் உற்பத்தி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x