Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

மேலூர், அலங்காநல்லூரில் : கந்துவட்டி சட்டத்தில் 7 பேர் மீது வழக்கு :

மதுரை: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் புவனேசுவரி. இவர் 2019-ல் மேலூரைச் சேர்ந்த கவுசல்யாதேவி என்பவரிடம் 4 சதவீத வட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இந்நிலையில் கூடுதல் வட்டி கேட்பதாக புவனேசுவரி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கவுசல்யாதேவி அவரது கணவர் முருகானந்தம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகேசன் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல், அலங்காநல்லூர் அருகிலுள்ள சரவணா டவுன்ஷிப்பைச் சேர்ந்தவர் நவநீதன். இவர் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் 2018-ல் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இந்நிலையில் கூடுதல் வட்டி கேட்டதாக அலங்காநல்லூர் போலீஸில் நவநீதன் புகார் அளித்தார். அதன் பேரில் கந்துவட்டி சட்டத்தில் அசோக் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

சிலைமான் அருகிலுள்ள இளமனூர் எல்கேடி நகரைச் சேர்ந்தவர் சரோஜா (52). இவர், சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வள்ளி, வினோத்குமார் ஆகியோரிடம் 2019-ல் ரூ. 5 லட்சம் வாங்கினார். வள்ளியின் மகன் சஞ்சீவி கூடுதல் வட்டி கேட்டார். இதையடுத்து புகாரின்பேரில் வள்ளி, அவரது மகன் சஞ்சீவி மற்றும் வினோத்குமார் ஆகியோரை கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் சிலைமான் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x