Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

செங்கை மாவட்ட காவல் நிலையங்களில் - குழந்தை காவலர் திட்டம் அறிமுகம் :

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காவல் துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு

செங்கை மாவட்ட காவல் நிலையங்களில் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கண்காணிக்க குழந்தை காவலர் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, ஆத்தூர் சிறுவர்மலர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் விநாயகம், குழந்தை நல குழுமம் தலைவர் ராமச்சந்திரன், சைல்டு லைன் இயக்குநர் தேவ அன்பு, சொசைட்டி ஃபார் எஜுகேஷனல் இயக்குநர் தேசிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், இளஞ்சிறார் நிதி குழுமத்தின் உறுப்பினர் ஜூலி, செங்கல்பட்டு சிறப்பு குழந்தைகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பாண்டியன், தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விரைவில் நடவடிக்கை

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாள ஒரு போலீஸார் நியமிக்கப்படுவார். அந்த போலீஸார் சீருடை அணியாமல் இந்த வழக்குகளை கண்காணிப்பார். வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்சோ சட்டம் தொடர்பாக கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x