புதன், ஜனவரி 15 2025
Last Updated : 19 Jul, 2021 03:13 AM
Published : 19 Jul 2021 03:13 AM Last Updated : 19 Jul 2021 03:13 AM
ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர் கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது 2 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிப்பதாகக் கூறி, சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளை அறுத்து விரட்டினர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT