Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க - அரசு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறப்பு : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், பிரச்சினைகளை அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ’’ திருப்பத் தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள், கோரிக்கை, குறைகள், அடிப்படைதேவைகள், அரசின் திட்டங்கள் குறித்து அனைத்து விதமான தகவல்களை தெரிந்துக்கொள்ள மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவல கங்கள், பிடிஓ அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளன.

அதேபோல, அனைத்து வகையான சான்றுகள், நிலம் உட்பிரிவு மேற்கொள்ளுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலம் தொடர்பான பிரச்சினைகள், புயல் வெள்ளம் தொடர்பான பிரச்சினைகளையும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவித்து தீர்வு காணலாம்.

அதன்படி, திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் 04179-220091 என்ற எண்ணிலும், நாட்றாம்பள்ளி 04179- 242499, வாணியம்பாடி 04174-232184, ஆம்பூர் 04174-244255 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். கிராமப்புறங் களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்க திருப்பத்தூர் பிடிஓ அலுவலகம் 04179-220110, ஜோலார்பேட்டை 04179- 220015, நாட்றாம்பள்ளி 04179-242221, மாதனூர் 04179-256225, கந்திலி 04179-248231, ஆலங்காயம் 04174-265283 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பேரூராட்சிகளில் குடிநீர், சாலை பராமரிப்பு, மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு திருப் பத்தூர் நகராட்சி அலுவலகம் 04179-220048 அல்லது 18004253691 என்ற எண்ணிலும், ஜோலார்பேட்டை நகராட்சி 04179-241268, வாணியம்பாடி நகராட்சி 04174-235317, ஆம்பூர் நகராட்சி 04174-242740, ஆலங்காயம் பேரூராட்சி 04174-265225, உதயேந்திரம் பேரூராட்சி 04174-298180, நாட்றாம்பள்ளி பேரூராட்சி 04179-242118 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மின்சாரம் தொடர்பான பிரச்சினை மற்றும் புகார்களுக்கு 90259-00943 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பொதுவான கருத்துகளுக்கு சார் ஆட்சியர் அலுவலகம் 04179-220088, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04179-234488 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நோய் தொற்று தடுப்பு முகாம்கள் போன்ற தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04179-222111 என்ற எண்ணில் தெரிந்துக்கொள்ளலாம். இதற்காக, ஒவ்வொரு கட்டுப் பாட்டு அறைகளுக்கு சிறப்பு பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x