Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM
பெரம்பலூர் ஆட்சியர் ப. வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1430-ம் பசலிக்கான(2020-21) ஜமாபந்தி தொடர்பான மனுக்களை உரிய ஆவணங் களுடன் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் தாங்களாகவோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து, அதற்குரிய ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி யிலும் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை பொதுமக்கள் போடலாம். இம்மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு பதில் அளிக்கப்படும் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT