Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM

புழுக்கத்தில் தவித்த மக்களை புன்னகைக்க வைத்த மழை :

வருமா... வராதா.. என, பல நாட்களாக எதிர்பார்த்த மழை, நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென வந்து திருநெல்வேலி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பாளையங்கோட்டையில் குடையின் உதவியுடன் மழையில் நனையாமல் வீட்டுக்கு விரைந்த சிறுவன். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

கடந்த பல நாட்களாக புழுக்கத்தில் தவித்த திருநெல்வேலி மக்கள், நேற்று பெய்த திடீர் மழை தந்த குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில்சுட்டெரித்து வந்தது. நேற்று மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு தொடங்கி அரை மணிநேரத்துக்கும் மேலாக பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. நேற்று பகல் முழுக்க தகித்த வெப்பம் மழையால் மாலையில் தணிந்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்டபாபநாசம் அணை நீர்மட்டம் 119.75அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 526 கனஅடி தண்ணீர்வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,504 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடிஉச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 168 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x