Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2021-22-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூம் செயலி வழியாக நேற்று நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் 2021-22-ம் ஆண்டின் தலைவராக எஸ்.அன்பழகன், செயலாள ராக இ.என்.சுரேந்திரன், பொருளாள ராக பி.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2020-21-ம் ஆண்டின் தலைவர் எஸ்.கதிரேசன் வரவேற்றார். செயலர் ஜெ.கே.சுரேஷ் திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட ரோட்டரி ஆளுநர் கே.சுந்தரலிங்கம், மாவட்ட ரோட்டரி பயிற்றுநர் சி.சிவஞானசெல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பல்வேறு நலத் திட்டங்களை வழங்கிப் பேசினர்.
இதனைத்தொடர்ந்து ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கே.குணசேகர் புதிய உறுப்பினர் களை சங்கத்தில் இணைத்து வைத்துப் பேசினார். தொடர்ந்து கோயில் பூசாரிகள் 16 பேருக்கு கரோனா நிவாரண உதவியாக மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஏழை விவசாயி ஒருவருக்கு பசுமாடு, மருந்து தெளிப்பான் கருவி, ஆத்மபூமி மயான ஊழியர்களுக்கு சீருடை, பிபி கிட் உடைகள், உறுப்பினர்கள் 38 பேருக்கு மாடி தோட்டம் பயிரிடும் விதை தொகுப்பு, ஒருவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் போன்றவை வழங்கப்பட்டன.
புதியதாக பொறுப்பேற்ற பிற நிர்வாகிகள் விவரம்: தலைவர் (தேர்வு) கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், தலைவர் (நாமினி) இ.ராமலிங்கம், உதவி தலைவர்கள் ஏ.மஸ்தான், ஜெ.கே.சுரேஷ், பொருளாளர் பி.கண்ணன், இணைச்செயலர் ஜி.ராமலிங்கம் (எ) தினகர், சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் ஏ.ஜி.ஜெயக்குமார், என்.கனகராஜ், கிளப் நிர்வாகம் ஜி.டி,சீனிவாசன், உறுப்பினர் சேர்க்கை மேம்பாடு கே.செல்வகுமார், பொதுமக்கள் தொடர்பு, ஏ.திருமூர்த்தி, சேவை திட்டம் பி.பிரபு, கே.ராமநாதன், ரோட்டரி பவுண்டேஷன் எல்.சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
நிகழ்ச்சியில், நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், ரோட்டரி மண்டல முன்னாள் உதவி ஆளுநர்கள் எஸ்.பாலாஜி, கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பிரகாஷ், பி.நடராஜன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் கே.கந்தசாமி, வி.சேதுராமன், ஆர்.சிட்டி வருதராஜன், பி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT