Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

சேலம் மாவட்டத்தில் இரு நாட்களுக்கு பின்பு - தடுப்பூசி வந்ததால் மையங்களில் திரண்ட மக்கள் : இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்துக்கு கோவேக்சின் 2 ஆயிரத்து 880 டோஸ்களும், கோவிஷீல்டு 50 ஆயிரத்து 700 டோஸ்களும் வந்தன.

இதில், ஊரகப்பகுதிக்கு கோவேக்சின் தடுப்பூசி 2 ஆயிரத்து 880 டோஸ்களும் கோவிஷீல்டு 34 ஆயிரத்து 880 டோஸ்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 20 ஆயிரத்து 500 டோஸ்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்களில் நேற்று பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில், சேலம் மாநகராட்சியில் 32 மையங்களும், ஊரகப் பகுதியில் 106 மையங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏமாற்றத்தை தவிர்க்க பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனிடையே, ‘சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால், இன்று (4-ம் தேதி) மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஈரோட்டில் நேற்று 113 இடங்களில் 16,670 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 113 இடங்களில் நடந்த தடுப்பூசி போடும் முகாமில், 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 253 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் முகாம்களில் நள்ளிரவு முதலே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர். இதனால் ஏற்படும் கூட்டத்தை தவிர்க்க சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். இதன்படி மாவட்டம் முழுவதும் 15, 170 கோவிஷீல்டு, 1,500 கோவேக்சின் என மொத்தம் 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது, என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்று கரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x