Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM
கரோனா தொற்றின் மூன்றாவது அலை விரைவில் ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3-வது அலை பரவலை தடுக்கவீடு, வீடாக ஆய்வு நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆணையர் சாரு உத்தரவின்பேரில், நகர்நலஅலுவலர் டாக்டர் வித்யா தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சி கொசு ஒழிப்புபணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 250 பேர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் ஒரு பகுதியை தேர்வு செய்து வீடு, வீடாகச் சென்று ஆய்வுநடத்துகின்றனர்.
வீட்டில் உள்ளவர்களின் விவரம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் கள் உள்ளனரா, இதுவரை தொற்று ஏற்படாத நபர்கள் இருக்கின்றனரா, தகுதியான நபர்கள் தடுப்பூசி போட்டுவிட்டனரா என்ற விவரங்களை சேகரிக்கின்றனர்.
மேலும், வீட்டில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உள்ளதா, கரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்கின்றனர். யாருக்கேனும் கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்கின்றனர். ஒவ்வொரு பணியாளரும் தினமும் 70 முதல் 100 வீடுகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 6 நாட்கள் கழித்து மீண்டும் அதேவீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள். இவ்வாறு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வாரத்துக்கு ஒரு முறை சென்று ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப் பணி இன்னும் 3 முதல் 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும்.
இதனைத் தவிர ரத்த அழுத்தம்,சர்க்கரை பாதிப்பு இருப்பவர்களுக்கே மாநகராட்சி சார்பிலேயேமருந்து மாத்திரைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT