Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக - கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் :

அகில இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், வேளாண் மானியத்தை உயர்த் துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 7 மாதத்தை நிறைவு செய்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு மற்றும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் நெய்வேலி, பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங் கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கி னார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செய லாளர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அம்பேத்கர் சிலை அருகே இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 7 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக் கும் ரூ.7,500 நேரடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

புதுச்சேரி

இதேபோல் புதுச்சேரியில் அனைத்து சங்கத்தினர் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம், சிஐடியு புதுச்சேரி பிரதேச செயலாளர் சீனுவாசன், ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எப் மாநில செயலாளர் செந்தில், பொறுப்பாளர் கபிரியேல், ஏஐயுடியுசி மாநில தலைவர் சங்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x