Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதல்வர் மாநில இளைஞர் விருதைப் பெற விண் ணப்பிப்பவர்கள் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் கடந்தநிதியாண்டில் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 30-ம்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT