Published : 15 Jun 2021 03:14 AM Last Updated : 15 Jun 2021 03:14 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - ஒரு மாதத்துக்கு பிறகு தேநீர், சலூன் கடைகள் திறப்பு : காவல் துறை பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை
தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். அடுத்த படம்: செய்யாறு அடுத்த வாழ்குடை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறப்புக்கு வரவேற்பு அளித்த கரும்பு விவசாயிகளால் மகிழ்ச்சி அடைந்த மதுபிரியர்கள், சாலையில் மது பாட்டில்களை வைத்து வணங்கினர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் புதிய தளர்வுகளின்படி ஒரு மாதத்துக்குப் பிறகு தேநீர், சலூன் கடைகள் திறக்கப்பட்டன. காவல் துறை பாதுகாப்புடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
WRITE A COMMENT