Published : 06 Jun 2021 03:14 AM
Last Updated : 06 Jun 2021 03:14 AM
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தரம் நகரைச் சேர்ந்த நயினார் கண்ணு மனைவி ராஜேஸ்வரி (34). இவர், தெர்மல்நகர் கேம்ப் 2-ல் மளிகை கடைநடத்தி வருகிறார். கடந்த மாதம் 23-ம்தேதி பூட்டிச் சென்ற தனது கடையை கடந்த 2-ம் தேதி இவர் மீண்டும் திறந்தார். அப்போது கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், தூத்துக்குடி கேம்ப் 2 பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முனீஸ்வரன் (22), லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (20), கல்யாணி மகன் அலெக்ஸ் (19) மற்றும் பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (20) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடையில் திருடியது தெரியவந்தது. 4 பேரையும் இன்ஸ்பெக்டர் சாந்தி கைது செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT