Published : 02 Jun 2021 03:15 AM
Last Updated : 02 Jun 2021 03:15 AM

மண் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி - பயிர்களின் தேவைக்கு ஏற்ப உரமிட வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மண் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி வேளாண் அலுவலர் பரிந்துரைப்படி பயிர்களின் தேவைக்கேற்ப உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேளாண் தீவிர சாகுபடி முறை, வீரிய மற்றும் ஒட்டு ரகங்களின் பயன்பாடு ஆகியவற்றால் மண்ணில் இருந்து அதிகளவு சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. நீடித்த நிலையான பயிர் மகசூலுக்கு மண் வளத்தினை பேணி பாதுகாப்பு என்பது அவசியமானதாகும். இந்த வகை மண் வளத்தில் பாதுகாத்திட மண் மேலாண் உத்தி களை கையாள மண் பரிசோதனை மிகவும் முக்கியமான ஒன்றாகும். மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களின் அளவை தெரிந்துக் கொள்ள லாம்.

மண்ணில் உள்ள பிரச்சினை களான கலர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ள லாம். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து, அந்த சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தினை பெருக்கிடலாம்.

எனவே, ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக்கூடாது. மண்ணின் நிறம் மற்றும் வகை வெவ்வேறாக தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மேட்டுபாங்கான மற்றும் தாழ்வான பகுதியில் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.

வரப்பு, வாய்க்கால் அருகிலும், மரத்தடி நிழல் பகுதிகளும், கிணற்றுக்கு அருகாமையிலும், மக்கிய குப்பை உரங்கள் பூஞ்சாண் மற்றும் பூச்சிமருந்து இடப்பட்ட பகுதிகளிலும் இருந்து மண் மாதிரி எடுக்கக்கூடாது.

நெல், கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு மேலிருந்து 15 செ.மீ., ஆழத்திலும் பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி பயிர்களுக்கு மேலிருந்து 22 செ.மீ., ஆழத்திலும், தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு 30 முதல் 60 அல்லது 90 செ.மீ., ஆழத்திலிருந்து மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடுக்கப்பட்ட மண்ணை அரை கிலோ அளவு சேகரித்து பின் சுத்தமான ஒரு துணிப்பையில் போட்டு அதன் மீது மண் மாதிரி பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டி ருந்த சாக்குகள் மற்றும் பைகளை மண்மாதிரிகள் அனுப்ப பயன் படுத்தக்கூடாது.

விவசாயிகள் நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மூலம் நிலத்தின் மண் மாதிரிகளை ஒருமண் மாதிரிக்கு 20 ரூபாய் ஆய்வுக் கட்டணமாக செலுத்தி மண்வள அட்டையினை பெற்று அதன் பரிந் துரையின்படி பயிர்களின் தேவைக் கேற்ப உரமிட்டு உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x