Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

ஊரடங்கை மீறியவரின் வாகனம் பறிமுதல் போலீஸாரிடம் திமுகவினர் வாக்குவாதம் :

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமீப காலமாக கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நான்கு ரோடு சந்திப்பில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த துரைச்சாமி என்பவரை போலீஸார் தடுத்து நிறுத்தி வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்றனர்.

இதையடுத்து அவருக்கு ஆதரவாக திமுகவினர் சிலர் அங்கு வந்தனர். இதனால் போலீஸார், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை போலீஸ்காரர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதைப் பார்த்த திமுகவினர் போலீஸ்காரரை எச்சரித்தனர். போலீஸார் அமைதி காத்ததை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு விதியை மீறியதாக துரைச்சாமி மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x