Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
மொட்டமலை கிராமம் திருப்பணி மலையில் கல் குவாரி நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றன.
நீர்நிலைகளையும், மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த நடைபாதையையும் குவாரி உரிமம் எடுத்தவர் ஆக்கிரமித்துள்ளார். இக்குவாரி செயல்படத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.மலையேந்திரன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மதுரையில் குவாரி உரிமம் என்ற பெயரில், பல்வேறு மலைகள் 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றக் கிளை எதிரில் உள்ள யானைமலை 2008-ல் கனிமவள மாபியா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. பின்னர், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மலைகள், மலைக் குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இயற்கையின் கொடை. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை. எனவே, மலைகள், மலைக் குன்றுகளை அழிக்க உரிமம் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். இந்த வழக்கில் குவாரி உரிமம் வழங்கப்பட்ட மலையில், ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழுவுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்களை வைத்து குவாரி நடத்தினர். ஆனால், தற்போது வெடி வைத்து மலை தகர்க்கப்பட்டுள்ளது. மலையில் பாதியளவு வெடி வைத்து தகர்க்கப்பட்டுவிட்டது. இனிமேலும் உரிமத்தை தொடர்ந்தால் மலை முழுமையாக அழிக்கப்படும். எனவே, திருப்பணி மலையில் குவாரி நடத்த வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT