Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

தூத்துக்குடி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் :

தூத்துக்குடி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் அறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி நகர்புற கோட்டத்துக்கு உட்பட்ட கிழக்கு பிரிவு அலுவலகம் தெற்கு கடற்கரை சாலையில் கதவிலக்கம் 40 என்ற வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் வரும் 7-ம் தேதி முதல் தெற்கு கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணை மின்நிலைய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மின் வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கவுள்ளது. அனைத்து மின் சேவைகளுக்கும் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வரும் 0461- 2321651 என்ற தொலைபேசி எண்ணுக்கே தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x