Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகபதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகைதமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் வாயிலாக புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மாவட்ட அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் மூலம்புதுப்பித்தல் மேற்கொள்ளும் போது வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT