Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடல் நலம் தொடர்பான குறுகிய கால பயிற்சி வழங்க தகுதியானவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போதைய கரோனா சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடல்நலம் தொடர்பான பணியாளர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்-அடிப்படை, பொது கடமை உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர், மேம்பட்ட பொது கடமை உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய 6 பிரிவுகளில் உடனே பணியாளர்களை தயார் செய்யும் வகையில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வழங்க தேவையான தகுதியும், கட்டமைப்புகளும் கொண்டவர்கள் வரவேற்கப்படு கிறார்கள்.
பயிற்சி 1 மாதத்தில் நிறை வடையும் வகையிலும், அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், வேலைப் பயிற்சி மேற்கொள்ளும் வித மாகவும், அப்பயிற்சியும் நிறைவடைந்த பின்னர் அதே மருத்துவமனைகளில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே, இப்பயிற்சியை வழங்க ஏற்கெனவே திறன் இந்தியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் இணையதளங்களில் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றவர்கள் மற்றும் பதிவு செய்து அங்கீகாரம் பெறாமல் உள்ளவர்களும் மேலும், இதுநாள் வரை பதிவு செய்யாமல் இப்பயிற்சியை வழங்கும் கட்டமைப்பு உள்ளவர்களும், மருத்துவமனைகள், கல்லூரிகள் முதலானோர் மாவட்ட திறன் குழுவிடம் தங்கள் விருப்பத்தை எழுத்துப் பூர்வமாக தெரிவித்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அங்கீகாரம் பெற்று பயிற்சி வழங்கலாம்.
கூடுதல் விவரங்கள் அறிய, ஓசூர் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 94990 55837, 97896 81995 என்ற செல்போன் எண்களிலும், adrichsr110@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT