Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM
தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்துவதால் 3 நாட்களுக்கு பலசரக்கு கடைகளை திறக்கவும், அங்கு மொத்த வியாபாரம் மட்டும் செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த மேலும் தளர்வு களுடன் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கடந்த 7 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதே நடைமுறை அடுத்த 7 நாட்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேலூர் மண்டி தெரு மற்றும் லாங்கு பஜாரில் உள்ள பல சரக்கு கடைகள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து கடைகளும் ஒரே நாளில் திறக்காமல் ஒரு நாளைக்கு ஒரு பகுதியில் உள்ள கடைகள் மட்டுமே திறந்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகளில் சில்லறை விற் பனைக்கு அனுமதி இல்லை என மாவட்டம் நிர்வாகம் தெரிவித் துள்ளது.
வியாபாரிகள் மொத்தமாக சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கடைகள் முன்பாக யாரும் நிற்கக்கூடாது. கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர் கள் மட்டுமே அங்கு பணியில் இருக்க வேண்டும்.
மளிகைப் பொருட்களை பார்சல் செய்த பிறகு வியாபாரிகள் சென்று வாங்கிச் செல்லலாம். மேலும், வீடுகளிலிருந்து தொலைபேசி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு பொருட்கள் வீட்டுக்கு சென்று விநியோகம் செய்யவும், அதற்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட் களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட மளிகை மொத்த வியாபாரம், சூப்பர் மார்க்கெட், ஜெனரல் ஸ்டோர்ஸ் ஆகிய கடை நிறுவனங்களுக்கு தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வீட்டில் இருந்தே பெற்றுக்கொண்டு முழு ஊரடங்கை முறையாக கடைப்பிடித்து கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட நிர்வா கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவண்ணாமலை
வீடு, வீடாக சென்று மளிகைப்பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள் ளது. மளிகைப் பொருட்களை பேக்கிங் செய்து டோர் டெலிவரி மூலமாக மக்களுக்கு விநியோ கம் செய்யலாம். கடைக்கு வாடிக்கையாளர்களை வரவழைக் கக்கூடாது. கடையை திறக்கவும் அனுமதி கிடையாது.
ஒரு கடைக்கு இரண்டு வாகனங் கள் என அனுமதி வழங்கப்படும். நகராட்சி அல்லது ஊராட்சி அமைப்புகள் மூலம், டோர் டெலிவரி செய்யும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாமல் மளிகைப் பொருட்களை கொண்டு சென்றாலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
டோர் டெலிவரி பணியில் ஈடுபடுபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் ” என கேட்டுக் கொண்டார்.
இதில், வட்டாட்சியர் வெங்க டேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT