Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் கருவிகளை வாடகையின்றி பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோடை உழவு செய்திட வேளாண் உபகரணங்கள் வாடகையின்றி வழங்கப் படுகின்றன. கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான வேளாண்மை இயந்திரம் புழக்கம் ஆகியவற்றுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சர்வீஸ், தமிழக அரசுடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்கள் 2 மாதங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு அனைத்து வேளாண் பணிகளுக்கும் வாடகையின்றி வழங்கப்படுகிறது.
எனவே, வேளாண் கருவிகள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் உழவன் செயலி மூலமாவே நிறுவன சேவை மையத்தை 1800 420 0100 என்ற இலவச செல்போன் எண்ணிலோ, கிருஷ்ணகிரி மாவட்ட கள ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் - 99943 44142 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT