Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு - ரூ.7.5 லட்சம் மதிப்பில் படுக்கைகள், உபகரணங்கள் :

தூத்துக்குடி/ கோவில்பட்டி

டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பிலான படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப் பட்டன.

ரூ.2.5 லட்சம் மதிப்பில் 100 படுக்கைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் ஆக்ஸி மீட்டர், தெர்மா மீட்டர், ரத்த அழுத்த சோதனை கருவி, முகம் பாதுகாப்பு கண்ணாடி, சர்க்கரை அளவு சோதனை கருவி, வாட்டர் ஹுட்டர் என மொத்தம் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவற்றை டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் கள இயக்குநர்கள் விஜயகுமார், சுவாமிநாதன் ஆகியோர் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லெட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மானாடு தண்டுபத்து கிராமத்தில் 18 முதல் 44 வயதினருக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி கே.ஆர்.நூற்பாலை சார்பில் அரசு மருத்துவ மனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை மேலும் 7 ஆக்சிஸன் செறிவூட்டும் கருவிகளை உறைவிட மருத்துவர் பூவேஸ்வரியிடம் கே.ஆர்.நூற்பாலை நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணா சலம் வழங்கினார். மருத்துவர் வெங்கடேஷ் உடனிருந்தனர். மொத்தம் 10 கருவிகள் ரூ.7.5 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x