ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 26 May, 2021 03:14 AM
Published : 26 May 2021 03:14 AM Last Updated : 26 May 2021 03:14 AM
தேனி: தேனி அரண்மனைப்புதூர் விலக்கு அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி நேற்று வாகன சோதனை செய்தார். அப்போது தேனி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளைப் போலீஸார் நிறுத்தினர். அதில் வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் முகக்கவசம் அணியவில்லை. தான் காவல் துறையில் பணிபுரிவதாகக் கூறினார். விசாரணையில் இவர் ஆயுதப் படைக் காவலர் ரஞ்சித்குமார் என்பது தெரிய வந்தது. இவருக்கு ரூ.200 அபராதம் விதிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT